உலக மக்கள் தொகை 2024-ல் எவ்வளவு இருக்கும்? ஆய்வு முடிவு
தற்போது உலகின் மக்கள் தொகை 7.4 பில்லியன் என்ற அளவில் உள்ளது. ஆனால் இந்த மக்கள் தொகை எண்ணிக்கை வரும் 2024ஆம் ஆண்டில் 8 பில்லியனை கடந்துவிடும் என்றும் 2038ல் 9 பில்லியனாக உயர்ந்துவிடும் என்றும் வரும் 2100ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 11 பில்லியனாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் வரும் காலங்களில் மக்கள் தொகை விகித உயர்வு அதிகமாக காணப்படும் என்று அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் குடும்பகட்டுப்பாடு திட்டம் இல்லாததால் அந்நாடுகளில் வரும் 2100 ஆம் ஆண்டு 4.4 பில்லியன் மக்கள் தொகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உலகின் 3ல் 1 பாக மக்கள் தொகை அங்குதான் இருக்கும் என்று கூறுகிறது அந்த ஆய்வு.