உலகின் அதிக சக்தி வாய்ந்த டார்ச் லைட். சீன நிறுவனம் சாதனை.

  

7c உலகின் அதிக சக்திவாய்ந்த டார்ச் லைட் ஒன்றை சீன நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டார்ச் லைட்டின் வெப்பத்தின் மூலம் ஒரு முட்டையை ஆம்லேட்டாக மாற்றலாம்.

 சீனாவின் ஷாங்காய் நகரத்தை சேர்ந்த Wicked Lasers என்ற நிறுவனம் புதிய வகை டார்ச் லைட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டார்ச் லைட் 4100 lumens திறன் உள்ளது.

7a இந்த டார்ச் லைட் வெளிச்சத்தின் மிக அருகில் ஒரு டீ கப்பை வைத்தால் அந்த டீ கப் உருகிவிடும். அந்த அளவிற்கு வெப்பத்திறனை உண்டாக்கவல்லது. மேலும் இந்த லைட் கொடுக்கும் வெப்பத்தினால் ஆம்லேட் கூட போடலாம். ஆனாலும் இந்த டார்ச் லைட்டின் சக்தியை அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்,

 இதன் விலை $200 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் அலுமினியத்தால் செய்யப்பட்ட இந்த டார்ச் லைட் அடுத்த மாதம் முதல் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் எடை 610 கிராம் ஆகும். சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் செயல்படும் இந்த டார்ச் லைட் தொடர்ச்சியாக 10 முதல் 40 நிமிடங்கள் வரை ஒளி கொடுக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள பல்பு 2000 மணி நேரம் ஒளிகொடுக்கக்கூடிய அளவிற்கு திறன் உள்ளது.

7b

7

 

 

 

Leave a Reply