குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி பார்க்கும் WWE எனப்படும் ரெஸ்லிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கிய ரிவர்ஸ் கிக் ஒன்றினால் ஒரு வீரர் பரிதாபமாக பலியானார். இந்த சோக சம்பவம் மெக்சிகொ நாட்டில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
மெக்சிகோ நாட்டின் ஜிசுவானா என்ற இடத்தில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற ஒரு ரெஸ்லிங் போட்டியில் பெட்ரோ அகுவாயோ (Perro Aguayo) என்ற வீரர் பங்கேற்றார். போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றபோது எதிரணி வீரர் ஒருவர் அடித்த ரிவர்ஸ் கிக்கில் களத்தில் உள்ள ரிங்கிலேயே ரமைர்ஸ் மயங்கி சாய்ந்தார்.
ஆனாலும் தொடர்ந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. இரண்டு நிமிடங்கள் கழித்துதான் பெட்ரோ அகுவாயோ பலத்த காயமடைந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரெஸ்லிங் நிர்வாக குழுவினர் அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சையின் பலனின்றி அவர் அதிகாலை 1.30 மணிக்கு மரணம் அடைந்ததாக அறிவிக்கபப்ட்டது.
35 வயதான பெட்ரோ அகுவாயோ, கடந்த 20 ஆண்டுகளாக ரெஸ்லிங் போட்டியில் பங்கேற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1xRXNW7″ standard=”http://www.youtube.com/v/g1v5BPDcPXE?fs=1″ vars=”ytid=g1v5BPDcPXE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9660″ /]