அயோக்கியத்தனத்தின் பிரதிநிதியாக இன்னொரு அம்மாவை கொடுத்துவிட்டு போய்விட்டீர்களே!! ஜெயலலிதா குறித்து ஜெயமோகன்

அயோக்கியத்தனத்தின் பிரதிநிதியாக இன்னொரு அம்மாவை கொடுத்துவிட்டு போய்விட்டீர்களே!! ஜெயலலிதா குறித்து ஜெயமோகன்

சென்னையில் நேற்று நடைபெற்ற எழுத்தாளர் அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில்ல் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் தமிழக அரசியலைக் கடுமையாகச் சாடியதோடு ஜெயலலிதா, சசிகலா குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார்.

அவர் இந்த விழாவில் பேசியதாவது:

சின்னம்மா மேடம் கிட்ட எல்லாரும் கைகட்டி நிக்கறாங்க. உடனே, நமக்கு இந்த மாதிரி ஒரு நகரத்தில், இந்த மாதிரி டீசர்ட் எல்லாம் போட்டுகிட்டு வந்து உக்காரும் போது ‘ஏழை, அப்பாவி, ஒண்ணும் தெரியாதவங்க…’ அப்படி கைகட்டி நிக்கறாங்க என்று தோன்றுகிறது. அவங்க ஏழைகளோ, அப்பாவிகளோ, கையைக் கட்டி நிற்கிறவர்களோ அல்ல. அவர்களுக்குத் தெளிவா தொழில் தெரியும். மைக் கொடுத்த உடனே, ‘எங்களை வாழ வைத்த அம்மா’ என்கிறார்கள்.

பொதுச்சொத்தைக் களவாடுவதற்கா அம்மா எங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். ஆகவே, நாங்கள் அம்மாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்பதை இப்படிச் சொல்கிறார்கள். நான் என் தொழிலைப் பார்த்தேன். ஆகவே, அம்மா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்லக்கூடிய ஒரு பொதுஜனம் இந்தியாவில் கிடையாது.

நாகர்கோவிலில் ஓட்டுகேட்க வந்த வசந்த் டிவி வசந்த குமார் கிட்ட வந்து, “சும்மாவா வந்தீங்க… காசில்ல?” என்று கேட்கக்கூடிய ஆளை நானே பார்த்தேன். சாதாரண மக்கள் நம்மைவிட ஒரு படி மேலாக இருக்கிறார்கள். என்னமோ சட்ட போட்டவன் அயோக்கியன், ஏழை எளியவர்கள் கஞ்சியும் கூழும் குடிச்சு நேர்மையோட இருக்குறாங்கன்னா… இங்கிருந்து நேர்மையின்மை என்பதை அங்கே போய் கற்றுக்கொள்ளணும்.

இரண்டு வாரம் முன்பு, திருப்பத்தூர் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தோம். பெண்கள் சின்ன ப்ளாஸ்டிக் சொம்பில் தண்ணீர் கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். “இந்த காலத்திலயுமா டாய்லெட் போறதுக்கு இவ்வளவு சின்ன சொம்புல தண்ணி கொண்டுபோறாங்க” என்று கேட்டேன். “டாய்லெட்டுக்கு இவ்வளவு பேர் போவாங்களா சார்?” என்று உடனிருந்த நண்பர் கிருஷ்ணன் கேட்டார். 25 முதல் 30 அம்மாக்கள் போய்கொண்டிருக்கிறார்கள். எங்கே போறாங்கன்னா…. 100 நாள் வேலைத்திட்டத்தில் மரம் வளர்க்க தண்ணி கொண்டு போறாங்க. கார்ல அம்மாவைக் கொண்டு வந்து இறக்க விடுறான் பையன். ஒரு மணிநேரம் கழித்து கூட்டிக்கிட்டுபோயிவான். இதற்கு நூறு ரூபாய். இப்படித்தான் இருக்கு தமிழ்நாட்ல.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் 100 பேர் ஒரு வருஷம் வேலை செய்த ஏரியைப் பார்த்தீங்கன்னா… சுமார் 50 கிலோ மண்ணை எடுத்து வெளியே போட்டிருப்பார்கள். அவங்க புரட்சித் தலைவி அம்மா கையில் இப்படி கைகட்டி நிற்பதில் என்ன ஆச்சரியம் இருக்கு? ஏன்னென்றால், “எங்கள் அவ்வளவு பேரின் அயோக்கியத்தனத்தின் பிரதிநிதியாக இருந்தாயே அம்மா… எங்கள் அவ்வளவு பேரின் அயோக்கியத்தனத்தின் பிரதிநிதியாக இன்னொரு அம்மாவைக் கொடுத்துவிட்டுப் போனாயே அம்மா….” என்பது தான் நம்முடைய தமிழ் அரசியல்.

Leave a Reply