பிரபல எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் கைது: மகனை கொலை செய்தாரா?
மதுரை அருகே தனது மகனை கொலை செய்து புதைத்ததாக பிரபல எழுத்தாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக அவலங்களை தனது எழுத்தின் மூலம் வெளிக்காட்டி வந்த எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக இவர் பெண் சிசுக்கொலைகள் குறித்தும், அதனை தடுக்க வேண்டும் என்பது குறித்தும் அதிகம் எழுதியுள்ளார். இவர் எழுதிய கதை ஒன்றுதான் ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற பெயரில் திரைப்படம் ஆகி மிகபெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மனைவியை கடந்த சில ஆண்டுகளா எழுத்தாள செளபா பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது மகன் தாய், தந்தை இருவரிடமும் மாறி மாறி வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான செளபாவின் மகன் அடிக்கடி அவரிடம் குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும், அந்த ஆத்திரத்தில் ஒருநாள் மகனை கொன்று தோட்டத்திலேயே புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த விசாரணையில் மகனை கொலை செய்ததை செளபா ஒப்புக்கொண்டதை அடுத்து அவர கைது செய்யபப்ட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.