கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி: விசாரணைக்கு உத்தரவு

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி: விசாரணைக்கு உத்தரவு

கொரோனா வைரஸ் தடுப்பூசி க்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் என்ற பகுதியில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்தார்

அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கு பதிலாக வெறிநாய் கடிக்கான தடுப்பூசி மருந்து தவறுதலாக செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

தடுப்பூசி போட்டவரின் உடல்நலத்திற்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றாலும் இது குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது