செல்போன் உலகினை கலக்கிய சீனாவின் ஆப்பிள் எக்ஸ்யோமி எம்.ஐ.3.(xiaomi mi3)

xiaomi-mi313 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்ட் கிட்கட் இயங்குதளம், 2 ஜிபி ரேம் மெமரி, 16/64 ஜிபி உள்ளடக்க நினைவுத்திறன் போன்ற வசதிகளுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது எக்ஸ்யோமி எம்.ஐ.3.(xiaomi mi3) செல்போன்.

சீனத்தயாரிப்பான இந்த எக்ஸ்யோமி எம்.ஐ.3 கடந்த நான்காண்டுகளுக்கு முன் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸ்யோமி நிறுவனத்தின் தயாரிப்பு. இதன் எம்.ஐ3 என்ற மாடல் இந்த நிறுவனத்தை சீனாவின் நான்காவது மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறது. முதலில் மென்பொருள் நிறுவனாக துவங்கப்பட்டு வெற்றி கண்டபின் 2011ஆம் ஆண்டு எம்.ஐ1 என்னும் தனது முதல் செல்போனை வெளியிட்டது. அன்றிலிருந்து இன்று வரை லாபத்தை மட்டுமே பெற்று வருகிறது.

இந்த நிறுவனத்தை சீனாவின் ஆப்பிள் என்று வருணிக்கிறார்கள். ஏனென்றால், ஆப்பிளும், எக்ஸ்யோமியும் வன்பொருள் மற்றும் மென்பொருளைத் தங்கள் சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனம் வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு உற்பத்தி ஆப்பிள் நிறுவனத்தை மிஞ்சிவிட்டது. 2014ஆம் ஆண்டின் காலாண்டிலேயே இவர்கள் 2013ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யோமி எண்ணிக்கையைத் தாண்டிவிட்டார்கள்.

சீனா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்கும் இந்த மொபைல் இந்தியாவில் 2014ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த மொபைல் முதல் தவணையில் 20,000 போன்கள் 39 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன. அதேபோல, இந்த வாரம் வரையிலான நிலவரத்தில் மொத்தம் 95,000 போன்கள் விற்கப்பட்டுள்ளன. அடுத்த தவணை வரும் செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் நிலையில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பயனாளிகள் பலரும் முன்பதிவு செய்ய ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையதளத்தை பயன்படுத்தியதால் அந்த தளம் சில மணி நேரங்கள் முடக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, பட்ஜெட் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்கும் சாம்சங், மோட்டோரோலா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகியவற்றின் சந்தையை பிடித்துள்ளது. அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதத்தில் 6000 ரூபாய் மதிப்பிலான ரெடிமி 1எஸ் எனப்படும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

Leave a Reply