யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

12316306_798723116903719_1367769965521730988_n

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு” என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

Leave a Reply