யாஹூ சி.இ.ஓ திடீர் ராஜினாமா ஏன்?
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின் இணையதளமாக இருந்த யாஹூ, பின்னர் கூகுளின் பிரமாண்டமான வளர்ச்சி காரணமாக, சியர்ச் எஞ்சின், மெயின் ஆகிய இரண்டு தனித்துவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த யாஹூவை அமெரிக்காவின் நம்பர் ஒன் வயர்லெஸ் நிறுவனமான வெரிஜோன் 48.50 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.
யாஹூவை கைப்பற்றும் நடவடிக்கை முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மரிசாமேயர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் யாஹூ மற்றும் ஏஒஎல் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைத்து ‘ஓத்’ (Oath) என்ற நிறுவனத்தை வெரிஜோன் தொடங்கவுள்ளதாகவும், டிஜிட்டல் மார்க்கெட்டில் இந்த நிறுவனம் இன்னும் ஒருசில வருடங்களில் நம்பர் ஒன் ஆக வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘ஓத்’ நிறுவனத்திற்கு டிம் ஆம்ஸ்ட்ராங் என்பவர் சி.இ.ஓ ஆக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.