ஜிஎஸ்டியை உடனே அகற்ற வேண்டும்: பிரபல பாஜக தலைவர் ஆவேசம்

ஜிஎஸ்டியை உடனே அகற்ற வேண்டும்: பிரபல பாஜக தலைவர் ஆவேசம்

மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு எதிர்க்கட்சிகளும், வணிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரே ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார். அவர் தான் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

ஏற்கனவே பாஜக அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை கடந்த சில மாதங்களாக முன்வைத்து வரும் யஷ்வந்த் சின்ஹா, தற்போது ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்து பேசியுள்ளார்.

நேற்று வணிகர் சங்க பெரவை மாநாட்டில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ‘ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கும், மக்களுக்கும் இன்னல்களை தருகிறது மத்திய அரசு. ஜிஎஸ்டியை அகற்ற வேண்டும், இல்லையெனில் மக்களும், வணிகர்களும் ஒன்றிணைந்து அரசை அகற்ற வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணிக்கு ஆதரவு கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply