உலகின் மிக அதிக வயதான கின்னஸ் சாதனையாளர் ஜப்பானில் மரணம்
உலகிலேயே மிக அதிக வயதையுடையவர் என்ற பெருமையை கடந்த பல வருடங்களாக தக்க வைத்திருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் நேற்று மரணம் அடைந்தார். உலகின் மிக வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த இவரது பெயர் யசுடரோ கோய்டி, மாரடைப்பு காரணமாக நகோயா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த கின்னஸ் சாதனையாளருக்கு வயது 112.
கட்ந்த 1903-ம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார். ஒரு தையல்காரராக தன் வாழ்க்கையை தொடங்கிய அவர், உலகிலேயே அதிகம் வயதானவராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த போது உலக மக்களால் அறியப்பட்டார்.
கின்னஸ் சாதனையின் போது, மகிழ்ச்சியாக வாழ்வதே தனது நீண்ட நாள் ஆயுளுக்கு காரணம் என்று சொன்ன கோய்டி, இன்று மரணமடைந்தார். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.