குடியரசு தலைவரின் மாளிகைக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவு. அதிர்ச்சி தகவல்

குடியரசு தலைவரின் மாளிகைக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவு. அதிர்ச்சி தகவல்

pranabகுடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 5 லட்சம் ரூபாய் ஒரு மாதத்திற்கு தொலைபேசி கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த மன்சூர் தர்வேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் மாளிகைக்கான பராமரிப்பு செலவுகள் மற்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் உள்ளிட்ட விவரங்களை தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில், குடியரசு தலைவர் மாளிகைக்கான செலவினங்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. 2012 – 13ஆம் ஆண்டில்  30.96 கோடி ரூபாயும்,  2014 – 15 ஆம் ஆண்டில் 41.96 கோடி ரூபாயும் செலவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மெல்லும் குடியரசு தலைவர் மாளிகையில் பணிபுரியும் பணியாளர்களுக்கான செலவினங்கள், பராமரிப்பு செலவினங்கள் மற்றும் குடியரசு தலைவருக்கான செலவினங்களில் அடங்கும்.

குடியரசு தலைவர் செயலகத்தில் மொத்தம் 754 பணியாளர்கள் உள்ளனர். இதில் 9 பேர் தனிச்செயலர்கள், 27 பேர் ஓட்டுனர்கள் மற்றும் பல்வேறு தொழில்களை செய்யும் 64 பணியாளர்கள், 8 தொலைபேசி ஆப்ரேட்டர்கள் ஆகியோர் பணியில் உள்ளனர்.

கடந்த மே மாதம் இவர்களுக்கான சம்பளமாக 1.52 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதே மாதத்தில் 5.06 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 5.06 லட்சம் மற்றும் 4.25 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனக்கு கிடைத்த தகவலை வெளியிட்டுள்ள தர்வேஷ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி பார்த்தால் ஆண்டொன்றுக்கு குடியரசு தலைவர் மாளிகையின் செலவும் சுமார் 100 கோடி ரூபாயை தொடும் என தெரிவித்துள்ளார். 

Leave a Reply