வழக்கமாக அய்யப்ப பக்தர்கள் கார்த்திகையில் மாலை அணிந்து விரதம் இருந்து நெய் , தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் அடங்கிய இரு முடி கட்டி அதனை பக்தியுடன் சுமந்து சபரி மலை யாத்திரை செல்வது வழக்கம்.
ஆனால் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு பகுதியில் வினோதமாக இருமுடியுடன் ஜெயலலிதாவின் படத்தையும் சுமந்து சபரிமலைக்கு யாத்திரை சென்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
எடப்பாடி அருகே உள்ளது ஆடையூர் பக்கநாடு. இப்பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த சுமார் 25–க்கும் மேற்பட்ட பக்தர்கள் அப்பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் தலைமையில் சபரிமலை செல்வதற்காக துளசி மாலை அணிந்து விரதம் இருந்தனர்.
அவர்கள் நேற்று இரவு சபரி மலை செல்ல தயாரானார்கள். அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அபிஷேக பொருட்கள் கொண்ட இரு முடி பையுடன் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலிதாவின் புகைப்படத்தையும் சுமந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டனர்.
இவ்வாறு வினோதமாக சபரிமலை யாத்திரை சென்றவர்களை காண அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு கூடினர்.