என் கடன் பணி செய்து கிடப்பதே

images (1)
மனிதநேயப் பணியானது மனநிறைவைத் தருகின்ற ஒரு பணி. அது செய்யச் செய்ய மகிழ்வைத் தருவது. அத்தகைய பணி இன்று தாயகத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போர் முடிந்து விட்டாலும்> போரின் பாதிப்புக்கள் ஓய்ந்துவிடாத சூழலில் காலமறிந்து செய்யும் சிறு உதவி கூட ஞாலத்தில் மாணப் பெரிதாய் மதிக்கப்படும்.
அன்றாட உணவு> கல்வி> உடை> நோய்ப் பராமரிப்பு என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை ஆறு வருடங்கள் கடந்தும் நிறைவு செய்யப்படாமல் இருந்து வருகின்றது. புலத்தில் இருந்து செய்யப்படும் உதவிகள் பன்முகப்படுத்தப்படாத சூழலில் ஒருசில துறைகளில் திரும்பத் திரும்பச் செய்யப்படுகின்ற ஒன்றாகவும்> ஒருசில துறைகள் கவனிக்கப்படாத ஒன்றாகவும் இருந்து வருகின்றது. முறையான ஒரு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய பணிகள் தனிநபர்களால் செய்யப்படும் போது இத்தகைய குறைபாடுகள் தென்படவே செய்யும்.
ஆனாலும் ஒவ்வொருவரும்; தத்தம் சக்திக்கு ஏற்ப உதவிகளைச் செய்தே ஆக வேண்டும். அந்தவகையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பாவித்த> நல்ல நிலையில் உள்ள ஆடைகளைச் சேகரித்து அனுப்ப நான் முடிவு செய்துள்ளேன். எனது இந்த முயற்சிக்கு கரங்கொடுக்க சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இரு பெண்மணிகள் முன்வந்து உள்ளனர். அதேபோன்று> சேகரிக்கப்படும் ஆடைகளை குறைந்த செயவில் தாயகம் அனுப்பி வைக்க ஊடகவியலாளர் சண் தவராஜாவும் முன்வந்து உள்ளார்.
எனவே> அன்பு உறவுகளே> தயவு செய்து நல்ல நிலையில் உள்ள சேலை> பஞ்சாபி> சிறுவருக்கான ஆடைகள்> ஆடவருக்கான உடைகள் என்பவற்றை எமக்குத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எமது உதவிகளைப் பெறுபவர்கள் எமது சகோதரர்களே என்ற சிந்தனையை மனதிற் கொண்டு நல்ல நிலையில் உள்ள ஆடைகளை> கழுவி> சுத்தமான நிலையில் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தூண் வரசித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்திடம் நீங்கள் ஆடைகளை ஒப்படைக்கலாம். தொடர்புகளுக்கு எனது இலக்கம்: 076 360 94 86, 079 332 80 37
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனது கோரிக்கையைச் செவிமடுத்து வாக்களித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மீண்டுமொருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்> எனது இந்த முயற்சியிலும் எனக்கு ஆதரவு வழங்குமாறு உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply