ரஜினி, விஜய், ஷங்கர் சாதனையை 24 மணி நேரத்தில் முறியடித்த அஜீத்.

ajith recordஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு ரிலீஸாகி, 24 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு சாதனையையும் செய்துள்ளது.

ரஜினியின் லிங்கா, ஷங்கரின் ஐ, விஜய்யின் கத்தி ஆகிய படங்கள் கடந்த பல நாட்களாக செய்த சாதனையை அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ஒரே நாளில் அதாவது 24மணி நேரத்தில் செய்துவிட்டது.

அதாவது கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸான விஜய்யின் கத்தி டீசருக்கு இதுவரை 32,192 லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், கடந்த நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸான ரஜினியின் லிங்கா’ படத்தின் டிரைலருக்கு 16,677 லைக்குகள் கிடைத்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் டிரைலருக்கு 41,195 லைக்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ஒரே நாளில் 43,412 லைக்குகள் கிடைத்து கோலிவுட்டில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது.

Leave a Reply