புதிய திரைப்படங்களை வீட்டுக்குள் கதவை பூட்டிக்கொண்டு பயத்தோடு திருட்டி டிவிடி மூலம் படம் பார்த்த காலம் போய் தற்போது திருட்டு டிவிடி மூலம் ஊர்த்திருவிழாவில் பொது இடத்திலேயே புதிய படங்களை போட்டு காட்டும் அளவுக்கு ஒருசிலருக்கு தைரியம் வந்துவிட்டது.
சேலம் அருகே உள்ள ஜகீர்ரெட்டியப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஊர்மக்கள் பொதுமக்களுக்கு பொது இடத்தில் திருட்டு டிவிடி மூலம் அஜீத் நடித்ஹ்ட என்னை அறிந்தால்’ திரைப்படத்தை போட்டு காட்டிய இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு புரஜெக்டர் மூலம் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படம் திருட்டு விசிடி மூலம் திரையிடப்பட்டுள்ளளதாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கு ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததையும், அதை பொதுமக்கள் மிகவும் ரசித்து பார்த்து கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் டி.வி.டி, பிளேயர், புரஜக்டர், மினி திரை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்த போலீஸார் சின்னசாமி மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.