இண்டர்நெட்டில் பரவிய ‘என்னை அறிந்தால்’ முழுக்கதை. அஜீத், கவுதம் மேனன் அதிர்ச்சி?

yennai arinthaalஅஜீத், அனுஷ்கா,த்ரிஷா, அருண்விஜய் மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டதாக இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் செய்தி கசிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ கதை என்று ஒரு கதை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கதை இதுதான்போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜீத், மனைவி த்ரிஷா மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கனிம வளங்களை திருடும் அரசியல்வாதி கும்பல் ஒன்றை ஆதாரங்களுடன் அஜீத் பிடித்து கைது செய்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்த அரசியல்வாதி த்ரிஷாவையும் அஜீத் மகளையும் கொலை செய்கிறார்.

இதற்காக அரசியல்வாதியை பழிவாங்குவதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு களமிறங்குகிறார் அஜீத். இவரை ஒருதலையாக காதலிக்கும் அனுஷ்கா இவருக்கு உதவி செய்கிறார். அனுஷ்காவின் உதவியோடு அஜீத் எப்படி அரசியல்வாதியை பழிவாங்கினார் என்பதுதான் கதை.

சமீபத்தில் அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை மனதில் வைத்து கவுதம் மேனன் அஜீத் கேரக்டரை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

இது உண்மையிலேயே ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதைதானா? என்பது படம் வெளிவந்தபின்னர்தான் தெரிய வரும். ஆனால் இன்று காலை முதல் இந்த கதை சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Leave a Reply