கடந்த 2014-ம் ஆண்டு குடியிருப்பு ரியல் எஸ்டேட் தொழிலுக்குச் சாதகமான ஆண்டாக இல்லை. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், அரசின் வழிகாட்டி மதிப்பு உயர்வு போன்ற பல்வேறு காரணங்கள் பின்னடவைச் சந்தித்தது. ஆனால் இதற்கு மாறாக இந்தியாவின் வர்த்தக ரியல் எஸ்டேட் முன்னேற்றம் கண்டுள்ளதாக சிபிஆர்இ ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது 2014-ம் ஆண்டு வர்த்தக ரியல் எஸ்டேட் 2013-ம் ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது அந்த அறிக்கையின் முடிவு. இந்த முன்னேற்றம் இந்த 2015-லும் தொடரும் எனவும் அந்த அறிக்கையின் முடிவு சொல்கிறது. 3.3 கோடி சதுர அடி இடங்கள் 2014-ம் ஆண்டுக் காலகட்டத்தில் வர்த்தக ரியல் எஸ்டேடுக்காகக் கைமாற்றப்பட்டுள்ளது.
வர்த்தக ரியல் எஸ்டேடுக்கான இடத் தேவை 2014-ம் ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. இந்த வர்த்தக ரியல் எஸ்டேட் நாட்டில் மிக அதிகமாக பெங்களூவில் 37 சதவீதம் இருந்தது. இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களில் (National Capital Region) வர்த்தக ரியல் ரியஸ்டேட் 24 சதவீதமாக இருந்தது.
முடிவடைந்த கடைசிக் காலாண்டான அக்டோபர் – டிசம்பரில் 90 லட்சம் சதுர அடிகள் வர்த்தக ரியல் எஸ்டேடுக்காக வாங்கப்பட்டுள்ளன. இது கடந்த மூன்றாண்டுகளில் நடந்த நிலப் பரிமாற்றத்தில் மிக அதிகம்.
இந்த நிலை இந்திய வர்த்தக ரியல் எஸ்டேட்டின் ஒட்டுமொத்த சாதக அம்சத்தை எதிரொலிப்பாகும். பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் அமையவிருப்பதால் வர்த்த ரியல் எஸ்டேட்டுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.