ஏற்காடு தொகுதியில் துணை ராணுவம் தீவிர கண்காணிப்பு

இடைத்தேர்தலை முன்னிட்டு ஏற்காடு தொகுதியில் துணை ராணுவம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் ஞாயிற்றுக் கிழமை காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவதால், வெளிமாவட்டத்தைச் சேர்த்தவர்கள் ஏற்காடு தொகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ஆட்சியர் மகரபூஷணம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்காடு இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு வரும் 4-ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு 290 வாக்கு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply