யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட நிம்மதி: பரபரப்பு தகவல்

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட நிம்மதி: பரபரப்பு தகவல்

வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இனி பணம் எடுக்கலாம் என்று யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனால் நிதி நெருக்கடி ஏற்பட்ட யெஸ் வங்கியினை , பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழுமம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏற்பாடுகளை செய்து வருகிறது

இந்த நிலையில் யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதனையடுத்து மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அதன் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இனி பணம் எடுத்து கொள்ளலாம் என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply