இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் தன்னுடைய கவர்ச்சி வீடியோ வெளிவந்ததை அடுத்து கடும் ஆத்திரம் அடைந்த நடிகை தீபிகா படுகோனே, இன்று தனது டுவிட்டரில் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முன்னணி ஆங்கில இணையதளம் ஒன்றில் தீபிகா படுகோனின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. இதில் தீபிகா படுகோனே கவர்ச்சி உடையில் ஷாருக்கானுடன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ உள்ளது. இந்த வீடியோவை இன்று பார்த்த தீபிகா படுகோனே கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், “ஆம் நான் ஒரு பெண், எனக்கு இரண்டு மார்பகங்கள் உள்ளன, அதனால் உனக்கு என்ன பிரச்சனை? என்று அந்த பத்திரிகைக்கு கேள்வி எழுப்பும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.
தீபிகா படுகோனின் இந்த டுவிட்டர் செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளடு. அவர் இந்த அளவுக்கு கோபம் அடைந்து இதுவரை பார்த்ததில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளன. பெரும்பாலானோர் அந்த ஆங்கில பத்திரிகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wsJavB” standard=”http://www.youtube.com/v/OH_ijtr9JoU?fs=1″ vars=”ytid=OH_ijtr9JoU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6735″ /]