எது எதற்கெல்லாம் தடையில்லாச் சான்று?

cert_2528291f

சமீபத்தில் மத்திய அரசு விமான நிலையங்களுக்கு அருகில் கட்டப்படும் கட்டிங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. என்ன உயரம் இருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பிறகுதான் கட்டிடம் கட்ட வேண்டும்.

சரி இது போல என்னென்ன துறைகளில் எல்லாம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் எனக் கேள்வி எழுகிறதா? கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது மாதிரியான பெரிய சிக்கல் இல்லை. ஆனால் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் பல துறைகளிடம் இருந்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இப்படியான தடையில்லாச் சான்றிதழ் வாங்கவில்லை என்றால் அந்தக் கட்டிடத்துக்கான அனுமதி ரத்துசெய்யப்படும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக நீங்கள் வாங்கிய நிலம் ரயில் நிலையத்துக்கு அருகிலோ தண்டவாளத்துக்கு அருகிலோ இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதாவது அதில் இருந்து 30 மீட்டர் அளவில் இருந்தால் ரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும். ஏரியில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருந்தால் மாநிலப் பொதுப்பணித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

விமான நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்தால் விமான ஆணையத்திடமிருந்து தலையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும். இதுபோலப் பல தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியதிருக்கும். அதனால் தகுந்த சட்ட ஆலோசகரைப் பார்த்துச் சரி பார்த்து வீட்டு மனை வாங்குங்கள். கட்டிடப் பணியைத் தொடருங்கள்.

Leave a Reply