இவரே தமிழகத்திற்கும் முதல்வராக இருந்திருக்கலாம்? உபி முதல்வரை பார்த்து ஏங்கும் தமிழக விவசாயிகள்
தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். பல்வேறு வகையில் நூதன போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை
ஆனா எந்தவித போராட்டமும் இன்றி உபி மாநில விவசாயிகல் ரூ. ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர். ஆம், நேற்று அமைச்சரை கூட்டத்தை கூட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன் விளைவாக 2 கோடியே 15 லட்சம் விவசாயிகள் நலம்பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சம் பேர் மறைமுகமாக பலன்பெறுவார்கள் என்றும் உத்தரப்பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உபி முதல்வரின் இந்த அறிவிப்பை போலவே தமிழக முதல்வரும் தமிழக விவசாயிகளுக்காக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளனர். நாம் உபியில் பிறந்திருக்கலாம், அல்லது உபி முதல்வர் போன்று நமக்கு ஒரு முதல்வர் கிடைத்திருக்கலாம் என டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.