சி.எம். ஹெல்ப்லைன்: உபியில் மேலும் ஒரு அதிரடி திட்டம்
உத்தரபிரதேச மாநில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிரடியாக இன்னுமொரு அறிவிப்பையும் முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்கும் வகையில் புதிய உதவி எண் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.
‘சி.எம். ஹெல்ப்லைன்’ என்ற இந்த புதிய திட்டத்தின் மூலமாக, மக்கள் தங்கள் குறைகளைத் தொலைபேசி மூலமாகத் தெரியப்படுத்தாலம். இது, முதல்வரின் நேரிடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படி ஒரு திட்டம் ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வருகின்றனர். உபி மாநில அதிகாரிகள் சமீபத்தில் மத்திய பிரதேசம் சென்று இந்த திட்டம் குறித்து விரிவாக தெரிந்து கொண்டு வந்து வந்துள்ளனர்.
ஏற்கனவே ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் மக்களின் குறைகளை நேரடியாக தெரிந்து கொண்டு வருகிறார் முதல்வர் யோகி. தற்போது இணணயதளங்களை பயன்படுத்த தெரியாவதவர்களுக்காக இந்த திட்டம் கொண்டு வந்திருப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது