ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

nobleஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசின் அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் என்ற நகரில் தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி அவர்கள் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே சரிசெய்து மறுசுழற்சி செய்யும் உயிரியல் செல்களின் செயல்முறைகள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும் நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. மிக உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு 7-ம்தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இந்த பரிசை ஒரே ஒரு விஞ்ஞானி மட்டுமே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply