டொனால்டு ட்ரம்ப் தவறான முடிவை எடுத்துள்ளார். ரஷ்யா குற்றச்சாட்டு
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மாபெரும் தவறு இழைத்துவிட்டது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா அண்மையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. இது குறித்து ரஷ்ய சுற்றுச்சூழல் அமைச்சர் செர்ஜி டோன்ஸ்காய் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
புவி வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஐ.நா. சபையின் பல ஆண்டுகால முயற்சியின் பலனாக பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அந்த நாடே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இது மாபெரும் தவறு. அதிபர் டொனால்டு ட்ரம்ப் தவறான முடிவை எடுத்துள்ளார்.
எனினும் பெரும்பாலான நாடுகள் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்த உறுதிபூண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை ரஷ்யாவும் முழுமையாக அமல்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.