[carousel ids=”36650,36649,36648,36647,36646″]
அமெரிக்காவில் லான்ஸ் பென்ஸன் என்பவருக்குச் சொந்தமான குட்டி நகரம் ஒன்றை அந்த நகரத்தின் உரிமையாளர் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். நம்மூரில் வீடுகள் சொந்தமாக வைத்திருப்பது போன்று அமெரிக்காவில் சின்ன சின்ன நகரங்களை பெரிய பணக்காரர்கள் சொந்தமாக்கி கொள்வது வழக்கம். அதன்படி ஸ்வெட் என்ற இந்தச் சிறு நகரத்தை லான்ஸ் பென்ஸன் என்பவர் வைத்திருந்தார்..
இந்நகரத்தில் ஒரு பார், ஒரு பணிமனை, மூன்று வாகனங்கள், ஒரு வீடு மற்றும் 6.16 ஏக்கர் நிலம் ஆகியவை மட்டுமே உள்ளது. இதன் மதிப்பு 3 லட்சத்து 99 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.4 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வியாபாரத்தில் தனக்கு ஏற்பட்ட ஒருசில சிக்கல்களுக்காக இந்த சிறுநகரத்தை விற்க முடிவு செய்திருப்பதாக லான்ஸ் பென்ஸன் அவர்கள் கூறியுள்ளார்.
1940-ம் ஆண்டுகளில் இங்கு 40 பேர் வரை வசித்து வந்தனர். ஒரு அஞ்சலகமும் செயல் பட்டு வந்தது. நாளடைவில் லான்ஸ் பென்ஸன் இந்த நகரத்தில் இருந்த ஒவ்வொருவரிடம் இருந்து அவர்களது வீட்டை விலைகொடுத்து வாங்கி 1998ஆம் ஆண்டின் முடிவில் அந்த நகரத்தையே சொந்தமாக்கிக்கொண்டார்.
இந்த நகரில் தற்போது பென்ஸன், அவரது இரண்டாவது மனைவி ஆகிய இருவர் மட்டுமே வசிக்கின்றனர். இரண்டு மைல் சுற்றளவில் வேறெங்கும் நீர் கிடைக்காது என்பதால், இந்நகரத்தில் அவ்வப் போது உள்ளூர் மாடு மேய்ப்பர்களும், கோதுமை விவசாயிகளும் இங்கு குறைந்த எண்ணிக்கையில் கூடுவது வழக்கம்