கூகுளில் வரி’யை தேடினால் என்ன கிடைக்கும். பிரதமர் மோடி தகவல்

கூகுளில் வரி’யை தேடினால் என்ன கிடைக்கும். பிரதமர் மோடி தகவல்

modiகூகுளில் வரி செலுத்துவது எப்படி என்று தேடினால் என்ன கிடைக்கும் என்பது குறித்தும், வரி செலுத்துவோர்களை அதிகாரிகள் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வரித்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வரித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ‘ராஜஸ்வா ஜியான் சங்கம்’ எனப்படும் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் பங்கேற்ற வரித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது பிரதமர் மோடி, ”இந்தியாவில் வரி செலுத்துவது எப்படி? என யாராவது ‘கூகுள்’ தேடல் பொறியில் தேடினால், சுமார் 7 கோடி முடிவுகள் கிடைக்கும். அதேநேரம் ‘இந்தியாவில் வரிகள் கட்டாமல் தப்புவது எப்படி?’ என தேடினால் சுமார் 12 லட்சம் முடிவுகள் வருகிறது. ஆனால் இந்திய மக்கள் இயல்பாகவே நேர்மையானவர்கள். உத்வேகம் மிகுந்த மக்களால் நிறைந்ததுதான் இந்தியா. எனவே வரிகளை செலுத்துவதற்கான எளிய வழிகளை அவர்கள் கண்டறிந்து விடுவார்கள். வரி செலுத்துவதில் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் வரிகளை ஒழுங்காக செலுத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மிகவும் குறைவுதான்’ என்று கூறினார்.

Leave a Reply