கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிரிதி இரானி, இந்திய ஜனாதிபதியாக ஆவார் என்று ராஜஸ்தான் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளதால் பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, சமீபத்தில் தனது கணவருடன் ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் ஜோதிடர் பண்டிட் நாதுலால் வியாஸ் என்பவரது வீட்டிற்கு சென்று, தனது எதிர்காலம் குறித்து கேட்டுள்ளார்.
அவரது ஜாதகத்தை கணித்த ஜோதிடர், ஸ்மிரிதி இரானிக்கு மிகவும் பிரகாசமான வாழ்க்கை உள்ளது என்றும், அரசியல் வாழ்க்கையில் பெரிய பதவியை அடையலாம் என்றும் கூறினார்.
சுமார் 4 மணி நேரம் ஜோதிடர் வீட்டில் இருந்த அமைச்சர் ஸ்மிரிதி இரானி, தனது எதிர்கால வாழ்க்கை குறித்து பல்வேறு கேள்விகளை ஜோதிடரிடம் கேட்டுள்ளதாகவும், அப்போது, ஜோதிடர்` நீ ஒருநாள் இந்தியாவின் ஜனாதிபதி ஆவாய்` என்று இரானியிடம் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.