காரில் கேசட் போடும் இடத்தில் ஐபோனை செருகிய இளைஞர்.
[carousel ids=”71296,71297,71298″]
பழைய கார்களில் கேசட் போட்டு பாட்டு கேட்டு கொண்டே பயணம் செய்வதை நாம் பார்த்திருக்கின்றோம். தற்போது காரில் சவுண்ட் சிஸ்டம் முற்றிலும் மாறிவிட்டதால், தற்போது வரும் கார்களில் கேசட் சிஸ்டம் கிடையாது. ஆனால் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய தாத்தாவின் பழைய காரை சமீபத்தில் ஓட்டியுள்ளார்.
கேசட் போட்டு பாட்டு கேட்கும் வசதியுள்ள அந்த காரில் கேசட் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தை செல்போன் வைக்கும் இடம் என தவறாக நினைத்து, இளைஞர் தன்னுடைய விலையுயர்ந்த ஐபோனை அதில் வைத்துள்ளார்.
மீண்டும் ஐபோனை வெளியா எடுக்க முயற்சி செய்தபோது அந்த ஐபோன் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே வரவில்லை. ஒருவாறு நீண்ட முயற்சிக்கு பின்னர் அவர் ஐபோனை வெளியே எடுத்து பார்த்தபோது, அந்த ஐபோன் பல இடங்களில் ஸ்க்ராட்ச் ஆகியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் அவருடைய தாத்தா, அந்த பகுதி கேசட் போட்டு பாட்டு போடுவதற்கான பகுதி என்றும் அது செல்போன் வைக்கும் இடம் அல்ல என்றும் விளக்கியுள்ளார். தற்போதைய இளையதலைமுறையினர்களுக்கு பழைய வழக்கமுறை தெரியாததால்,அந்த இளைஞர் தன்னுடைய ஐபோனை இழந்து தற்போது பரிதாபமாக உள்ளார்.