இளம் ஜோடிகளுக்கு அளித்த இழிவு தண்டனை. ராஜஸ்தானில் 15 பேர் மீது வழக்கு.

rajastan punishmentராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தார் இளம்பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இழிவான தண்டனை வழங்கி அவமானப்படுத்தியதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோட்டா உதய்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள தேவாலியா என்ற பழங்குடியின கிராமத்தில், 17 வயது இளம்பெண்ணை 18 வயது இளைஞர் ஒருவர் தோளில் சுமந்தபடி ஓடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்து மக்கள் பஞ்சாயத்தார் முன்னிலையில் அவர்கள் இருவரையும் பிடித்து ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த பஞ்சாயத்தார் அவர்கள் இருவரையும் ஊர் மக்களின் முன்னிலையில் ஒருவர் காதை மற்றொருவர் பிடித்துக் கொண்டு முட்டி போட வைக்கும் தண்டனையை கொடுத்தனர்.
 
தண்டனை கொடுத்தது மட்டுமல்லாமல், பெண்ணின் குடும்பத்தாரிடம் இருந்து ஐந்தாயிரம் ரூபாயும், இளைஞரின் குடும்பத்தினரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயும் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது.
 
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது யூடியூபில் வெளியாகி, ராஜஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply