மெரினாவை நோக்கி படையெடுக்கும் தமிழக இளைஞர்கள். சுனாமியை மிஞ்சும் மக்கள் வெள்ளம்
சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என இரவுபகல் பாராது, கடுங்குளிரிலும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கின்றார். இந்த சந்திப்பில் நல்ல முடிவு கிடைத்தால் போராட்டம் வாபஸ், இல்லையேல் போராட்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஒருபக்கம் துணைராணுவ வீரர்கள் சென்னையில் இறங்கியுள்ள நிலையில் இன்னொரு பக்கம் தமிழகத்தின் மற்ற பகுதியில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மெரினாவில் தற்போது சுனாமியை மிஞ்சும் அளவிற்கு இளைஞர்களின் அலை அடித்து வருகிறது.