உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு உடனடியாக ஆபரேசன் செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இல்லாததால், அந்த ஆபரேசனை ஒரு எம்.எல்.ஏவே செய்து சாதனை செய்துள்ளார். அவரும் ஒரு டாக்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமாந்திரா மாநிலத்தை சேர்ந்த மதனப்பள்ளி என்னும் ஊரை சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா என்ற தம்பதியின் 13 வயது மகள் ஸ்ரீவள்ளி. 7 ஆம் வகுப்பு படித்து வரும் இவருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி வந்தது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு குடல்வால் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அலர்ஜியான குடல்பகுதியை அகற்றவேண்டும் என்றும் கூறினர். ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மதனப்பள்ளி மருத்துவமனையில் இல்லாததால், சிறுமியை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி கூறினர்.
உடனே இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அந்த தொகுதி எம்.எல்.ஏவான டாக்டர் தேசாய் டிப்பா ரெட்டியிடம் கூறினர். ஒய்.எஸ்.ஆர். எம்.பி.பி.எஸ் படித்து டாக்டர் பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏவான அவர் இதுபோன்ற பல குடல்வால் சர்ஜரியை அவர் வெற்றிகரமாக செய்துள்ளார். எனவே சிறுமிக்கு அவரே ஆபரேசன் செய்ய முன்வந்தார்.
மதனப்பள்ளி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக விரைந்து, அங்குள்ள டாக்டர்களின் உதவியோடு வெற்றிகரமாக ஆபரேசனை செய்து முடித்தார். தற்போது சிறுமி ஸ்ரீவள்ளி நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எம்.எல்.ஏவாக இருந்தாலும், மருத்துவர் தொழிலுக்கு மதிப்பு கொடுத்து ஆபரேசன் செய்து சிறுமியின் உயிரை காப்பாற்றிய தேசாய் டிப்பா ரெட்டியை தொகுதிகள் மக்கள் பாராட்டினர்.