யுவன்ஷங்கர் ராஜாவுக்கு வந்த திடீர் மயக்கம். குடும்பத்தினர் அதிர்ச்சி.

யுவன்ஷங்கர் ராஜாவுக்கு வந்த திடீர் மயக்கம். குடும்பத்தினர் அதிர்ச்சி.

yuvanபிரபல இசையமைப்பாளரும், இசைஞானி மகனுமான யுவன்ஷங்கர் ராஜா நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்றின் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு இசை நிகழ்ச்சிக்காக இரவுபகலாக ஒத்திகை பார்த்து வரும் யுவன்ஷங்கர் ராஜா சரியாக சாப்பிடாமல், தூங்காமல் தொடர்ந்து ஒத்திகை பணியில் இருந்ததால், நேற்று இரவு திடீரென நேற்று மயக்கம் அடைந்து விழுந்துவிட்டதாகவும், உடனடியாக அவருடைய உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

யுவனை பரிசோதனை செய்த மருத்துவர் அவரது உடல் மிகவும் சோர்வடைந்து இருப்பதாகவும், யுவன் கண்டிப்பாக பத்து நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் இன்னும் மூன்று நாட்களில் கனடாவில் இசை நிகழ்ச்சி இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையை யுவன் பின்பற்றுவாரா என்பது தெரியவில்லை.

யுவன்ஷங்கர் ராஜா தற்போது இடம் பொருள் ஏவல், தரமணி, யட்சன், சிம்பு நடிக்கும் கான் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். படங்களுக்கு இடைவிடாமல் இசையமைக்கும் பணி, வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஆகியவற்றால் யுவனின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply