புத்தாண்டு இரவில் நடந்த யுவன்ஷங்கர் ராஜாவின் ரகசிய திருமணம்.

yuvanபிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் கீழக்கரையை சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவருக்கும் நேற்றிரவு ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் இருதரப்பிலும் இருந்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கீழக்கரையை சேர்ந்த ஜூப்ரன் நிசார் என்ற பெண் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த யுவன், ஜூப்ரனை பார்த்தவுடன் காதல் கொண்டதாகவும், அவரை திருமணம் செய்வதற்காகவே யுவன் மதம் மாறியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் நேற்றிரவு கீழக்கரையில் உள்ள பள்ளிவாசல் தோட்டம் ஒன்றில் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply