ஐபிஎல் 2016: ரூ.9.5 கோடிக்கு ஏலம் போனார் ஷேன் வாட்சன்

ஐபிஎல் 2016: ரூ.9.5 கோடிக்கு ஏலம் போனார் ஷேன் வாட்சன்
ipl-auction
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஷான் வாட்சன் ரூ. 9.50 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. அவருக்கு
அடுத்தப்படியாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கிரிஸ்டோபர் மோரீஸை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்திய வீரர்களை பொருத்தவரையில், யுவராஜ் சிங்கை சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதிக விலைக்கு ஏலம் போன மற்ற வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு

மோஹித் சர்மா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)- ரூ.6.50 கோடி
ஆஷிஸ் நெக்ரா (சன் ரைசர்ஸ் ஹைதரபாத்)- ரூ. 5.50 கோடி
மிட்சல் மார்ஷ் (ரைசிங் புனே சூப்பர் ஸ்டார்ஸ்)- 4.80 கோடி
சஞ்சு சாம்சன் (டெல்லி டேர்டெவில்ஸ்)- ரூ. 4.20 கோடி
கார்லஸ் பாரத்வைட் (டெல்லி டேர்டெவில்ஸ்) – ரூ. 4.20 கோடி

அதிக விலைக்கு முக்கிய வீரர்கள் ஏலம்போன நிலையில் ஒருசில வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஷேஹன் ஜெயசூர்யா, ரியாத் எம்ரிட், ஆன்டோன் டேவிசிச், ஜோஹன் போதா, அஷ்டோன் அகர், ரோபின் பீட்டர்சன் ஆகியோர் இதுவரை ஏலம் எடுக்கப்படாமல் உள்ளனர். அதே போல, நாதன் மெக்குலம், ஜீவன் மெண்டிஸ், வெர்னோன் பிலாந்தர்ஸ், ருஸ்டி தேரோன், பெர்ஹான் ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. முனாஃப் படேல், பிரூரன் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply