ஹரியானா மாநிலத்தில் இரு குழுவினர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நள்ளிரவு 12 மணியளவில் ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா என்ற நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் கார் பார்க்கிங் பகுதியில் தனது நண்பர்களோடு நின்று பேசிக்கொண்டிருந்த போது இன்னொரு குழுவுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அதுவே அடிதடி சண்டையாக மோதியது.
யுவராஜ்சிங் தந்தை யோகராஜ் குழுவினரின் தாக்குதலில் முன்னாள் ஹரியானா போலீஸ் டி.எஸ்.பி மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்பட ஐந்துபேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஹரியானா போலீஸார் யுவராஜ்சிங் தந்தை யோகராஜ், மற்றும், அவரது நண்பர்கள் பூபிந்தர்சிங், ஆஷானந்த், மற்றும் அவரது மகன்கள் சுமித் நந்த், சுனி நரங்க் ஆகியோர்களை கைது செய்தனர்.
யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் ஏற்கனவே தொண்டைப்புற்று நோயால் அவதிப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட ஐந்து பேர்கள் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் ஹரியானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.