ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்ததா பயங்கரவாத அமைப்பு?

ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்ததா பயங்கரவாத அமைப்பு?

1“அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும்’ என்று பிரசாரம் மேற்கொண்டதாக ஜாகிர் நாயக் அவர்களுக்கு சொந்தமான ஐஆர்எஃப் அமைப்பு பயங்கரவாதத்தைப் பரப்பி வருவதாகவும், கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வெளிவந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு பணம் வழங்கியதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ள நிலையில் ஐஆர்எஃப் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் மாலிக் இதுகுறித்து கூறியதாவது: நாங்கள் எத்தனையோ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையை மட்டும் குறிப்பிட்டு சிலர் சர்ச்சையை எழுப்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஐஆர்எஃப் அமைப்பு தாமாக முன்வந்து நன்கொடை வழங்கியது. தற்போது பயங்கரவாதத்தைப் பரப்பி வருவதாகவும், கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம் சாட்டப்படுவதையடுத்து, அந்தத் தொகை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. நன்கொடை வழங்கப்பட்டபோது மத்திய அரசின் பயங்கரவாதக் கண்காணிப்பு வளையத்துக்குள் ஜாகிர் நாயக்கும், அவரது அமைப்புகளும் கொண்டு வரப்படவில்லை என்றார் அவர்.

Leave a Reply