ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் 1000va UPS ZEB-U1200 என்ற புதிய கம்ப்யூட்டர் யூபிஎஸ்ஸை (UPS)அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்வெட்டு நேரங்களில் தொடர்ந்து வேலை செய்யவும் கம்ப்யூட்டரை பாதுகாப்பாக ஷட்டவுன் செய்யவும் UPS உதவுகிறது. மேலும் UPS கம்ப்யூட்டரை பல மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதுடன் கம்ப்யூட்டருக்கு தரமான மின்சாரத்தை தருகிறது.
ZEB-U1200 ஒரு மைக்ரோப்ராசஸர் அடிப்படையிலான UPS. இந்த UPSன் கொள்ளளவு 1000VA. மேலும் இது நீண்ட நேர சக்திக்காக உள்ளேயே பொருத்தப்பட்ட இரட்டை பேட்டரிகள் கொண்டது. இந்த UPS பல சிறப்பம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக ஆஃப் செய்யப்பட்ட நிலையிலும் UPSஐ சார்ஜ் செய்ய உதவும் ஸ்லீப் மோட் சார்ஜிங் முக்கியமானது. இந்த UPS ஜெனரேட்டருடன் வசதியாக பொருந்தக் கூடியது.
இது மின்வெட்டு அதிகமாக இருக்கும் பகுதிகளில், மின்சாரத்திற்காக ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படும் பகுதிகளில் மிகவும் உதவுகிறது. இதில் கோல்ட் ஸ்டார்ட் சாத்தியம். அதாவது மின்சாரம் இல்லாத பொழுதும் இந்த UPSஐ ஸ்டார்ட் செய்ய இயலும். இந்த UPSல் பல அலாரம்களுக்காக ஒலி மற்றும் LED விளக்கு உள்ளது. மேலும் இது, நல்ல பேட்டரி ஆயுளை உறுதி செய்யும் ஓவர்லோடு, ஓவர்சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் பாதுகாப்புடன் வருகிறது.
இதன் முக்கிய அம்சங்கள்
# மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளைலிருந்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு பாதுகாப்பு
# மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலானது
# 1000VA, இரட்டை பேட்டரி
# ஓவர்லோடு பாதுகாப்பு
# ஜெனரேட்டருடன் பொருந்தக் கூடியது
# ஸ்லீப் மோட் சார்ஜிங்
# கோல்ட் ஸ்டார்ட் சாத்தியம்
ZEB-U1200 UPS, ரூபாய் 4200/-. விலையில் கிடைக்கிறது. இது ஒரு வருட ஜீப்ரானிக்ஸ் வாரன்டியுடன் வருகிறது.