ஜீப்ரானிக்ஸின் ராக்ஸ்டார் ஹெட்போன்கள்

ROCKSTAR-pic3_2480116f

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளேயே பொருத்தப்பட்ட மைக் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான வசதிகள் கொண்ட புதிய தலைமுறை ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பின்புறம் மூடப்பட்ட ஹெட்போன்கள் சிகப்பு மற்றும் நீலம் என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. உள்ளேயே பொருத்தப்பட்ட மைக், மீடியா கன்ட்ரோல் பட்டன், அழைப்புகள் மற்றும் ப்ளே/பாஸ் செய்ய பட்டன்கள் அமைந்துள்ளன. ராக்ஸ்டாரில் மாடலில் வலிமையான மேற்புறம் கொண்ட வயரும், சொகுசான பயன்பாட்டிற்காக மென்மையான செவிவளையங்கள் மற்றும் ஹெட்போன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வகை, மொபைல் மற்றும் டேப்லட்டுகள் போன்ற மொபைல் சாதனங்களுக்கான பிரத்யேக ஹெட்போன்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ராக்ஸ்டார் ஹெட்போன் ரூபாய் 599/- விலையில் கிடைக்கிறது. இது ஒரு வருடம் ஜீப்ரானிக்ஸ் உத்திரவாதத்துடன் வருகிறது.

Leave a Reply