ப்ளூடூத் வசதியுடன் புதிய 2.2 ஸ்பீக்கர்: ஜீப்ரானிக்ஸ் அறிமுகம்

ப்ளூடூத் வசதியுடன் புதிய 2.2 ஸ்பீக்கர்: ஜீப்ரானிக்ஸ் அறிமுகம்

 ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ZEB-BT361RUCF என்று அழைக்கப்படும் இந்த ஸ்பீக்கரின் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு மரப்பெட்டி அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் இணைப்பு பெறும் வசதி, USB போர்ட், SD சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனர் ஆகிய அம்சங்கள் உள்ளன. சப்வூஃப்பரின் ஒலி வெளிப்பாட்டு சக்தி 25W ஆகும்,

மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவியாக LED காட்சித்திரையுடன் கட்டுப்பாட்டு பலகம் பொருத்தப்பட்டுள்ளது. ஒலியளவு, பேஸ் மற்றும் ட்ரிப்பில் ஆகியவை பணிச்சூழலியல் முறைப்படி சப்வூஃபருக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2.2 ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் விலை ரூ.4242.

Leave a Reply