உலகக்கோப்பை டி-20 போட்டிகள்: ஜிம்பாவே-ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி

உலகக்கோப்பை டி-20 போட்டிகள்: ஜிம்பாவே-ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி
cricket
உலகக்கோப்பை டி-20 போட்டிகள் கடந்த 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றுள்ளன,

ஜிம்பாவே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை 147 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 116 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply