ஜிம்பாவே அணிக்கு எதிரான டி-20 போட்டி. 2 ரன்களில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
இந்திய அணி ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு நாடுகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்தது .அந்த அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ரன்கள் எடுத்தது. சிகும்பரா 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் முதல் பந்திலேயே போல்ட் ஆனார்.
பின்னர் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடினர். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவை என்ற நிலையில் கேப்டன் தோனி களத்தில் இருந்தும் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.