கூண்டில் மனிதர்கள். சுதந்திரமாக உலாவும் விலங்குகள். வித்தியாசமான மிருகக்காட்சி சாலை

கூண்டில் மனிதர்கள். சுதந்திரமாக உலாவும் விலங்குகள். வித்தியாசமான மிருகக்காட்சி சாலை

zooஇந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வன விலங்குகள் சரணாலயம், மிருகக்காட்சி சாலை ஆகியவைகளில் மிருகங்கள் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் மிருகங்களை நடந்தோ அல்லது வாகனங்களிலோ சென்று பார்த்து வருவார்கள். ஆனால் சீனாவில் உள்ள Chongqing என்ற நகரத்தில் பார்வையாளர்கள் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட ஒரு வாகனத்தில் சென்று சுதந்திரமாக உலா வரும் மிருகங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நகரத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் மிருகங்களை சுதந்திரமாக வனத்தில் இருப்பதைபோலவே உலவ விட்டுள்ளனர். இதனால் இந்த வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் கூண்டு போன்ற வாகனங்கள் அமைக்கப்பட்டு அதில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

ஒருசில இடங்களில் மிருகங்கள் வாகனங்களை சூழ்ந்து கொண்டு கம்பீரமாக கர்ஜிப்பதை த்ரில்லுடன் பார்வையாளர்கள் கண்டு களித்து வருகின்றனர். காட்டு விலங்குகளை மிக அருகில் த்ரில்லுடன் பார்க்கும் நிலை இங்கு உள்ளதால் இந்த சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Chennai Today News: Zoo where Human are Caged in China

 

 zoo1 zoo2 zoo3 zoo4 zoo5 zoo6

Leave a Reply