ZTE நிறுவனம் அதன் புதிய சமீபத்திய பிளேட் தொடர் ஸ்மார்ட்போனை விரிவாக்கம் செய்து பிளேட் S7 என்ற புதிய ஸ்மார்ட்போனை ஷாங்காயில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளேட் S7 ஸ்மார்ட்போன், செல்ஃபீ பிரியர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும் என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனம், இந்த கைப்பேசியின் விலை விவரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை, எனினும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் தாய்லாந்தில் விற்பனைக்கு செல்லும் என்றும், பின்னர் ஆசிய-பசிபிக் முழுவதும் உள்ள மற்ற சந்தைகளில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக முன் மற்றும் பின்புற கேமராவில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது. முன் கேமராவில் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ், பனோரமா மற்றும் 14 வெவ்வேறு அழகுபடுத்தல் விருப்பங்கள் ஆதரிக்கிறது. பின்புற கேமராவில் ஆட்டோ சூட்டிங் மோட், செலக்டிவ் ஃபோகஸ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் ஆகியவை உள்ளடக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லெமன் க்ரீன், ரோஸ் கோல்டு, டைமண்ட் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற வண்ண வகைகளில் வருகிறது.
ZTE பிளேட் S7 ஸ்மார்ட்போனில் திருத்தியமைக்கப்பட்ட MiFavor 3.2 UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. ZTE பிளேட் S7 ஸ்மார்ட்போனில் 445ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு ஹச்டி LTPS டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி DDR3 ரேம் உடன் இணைந்து 64பிட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ZTE பிளேட் S7 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின் மற்றும் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது அலுமினியம் அலாய் ஃபிரேம் மற்றும் முன் மற்றும் பின் இரண்டிலும் கொரில்லா கிளாஸ் 3 உடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி, ஜிஎஸ்எம், 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.